புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது மகளுக்காக உயிரையே பறிகொடுத்துள்ளார் மெக்சிகோவின் பெண் மேயர்.மெக்சிகோவை சேர்ந்த பெண் மேயர் மரியா சான்டோஸ் கோரஸ்டீட்டா. இவர் மொரிலா நகர மேயராவார்.


இவர் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தார். எனவே இவரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட கடத்தல் கும்பல், 2 முறை முயற்சி செய்தும் முடியாமல் போனது.

இந்நிலையில் சம்பவத்தன்று மேயர் மரியா, காலை 8 மணிக்கு தனது மகளை பள்ளியில் கொண்டு விடக் கிளம்பினார்.

அப்போது திடீரென போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மேயர் காரை வழிமறித்து மடக்கினர்.

காரிலிருந்து தரதரவென இழுத்து, சரமாரியாக அடித்தனர். இதை பார்த்ததும் தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மேயரின் மகளை கடத்த முயன்றனர், ஆனால் அவர்களிடம் எதிர்த்து கடுமையாக போராடினார் மரியா.

பின் தனது மகளை விட்டு விடும்படியும், தன்னை அழைத்து செல்லுமாறும் மரியா கூறினார்.

இதனையடுத்து தானாகவே காரில் ஏறிச்சென்றார் மரியா. கடத்திச் செல்லப்பட்ட மரியாவின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் ஒரு வாரம் கழித்த நிலையில் தற்போது மரியாவின் உயிரற்ற உடல் கிடைத்துள்ளது.

அவரது உடல் முழுவதும் கத்திக் குத்துக் காயங்கள் உள்ளன, சரமாரியாக அடித்துள்ளனர். உடலை தீவைத்தும் எரித்துள்ளனர்.

மரியா படுகொலை மெக்சிகோவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரை இந்த நூற்றாண்டின் கதாநாயகி என்று மெக்சிகோ மக்கள் வர்ணித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top