இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் முதுகு தண்டை அறுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை 94 தடவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.இங்கிலாந்தில் உள்ள வேமவுத்தைச் சேர்ந்தவர் லீ விட்டில்(வயது 42). கணவரிடம் இருந்து
விவாகரத்தான அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களில் ஒருவரான 16 வயது சிறுவனுக்கு கத்திகள் மீது அதீத ஈடுபாடு உள்ளது. கடந்த ஜூலை மாதம் அவன் தனது தோழிகளிடம் தனது தாய் இன்னும் சில நாட்கள் தான் வாழ்வார் என்று தெரிவித்துள்ளான். அதற்கு அவர்கள் ஒருவேலை லீக்கு ஏதாவது நோய் உள்ளதோ என்று நினைத்துக் கொண்டனர்.
பின்னர் அவன் வீட்டில் தனியாக இருந்த போது, தனது தாயை முதலில் முதுகுத் தண்டில் கத்தியால் குத்தி உள்ளான், பின்னர் அவரை 94 முறை குத்திக் கொன்றான்.
அதன் பிறகு அந்த ரத்தக் கரையோடு தோழிகளை சந்திக்க சென்று விட்டான். அவர்கள் கேட்டதற்கு யாரோ மர்ம நபர்கள் தங்கள் வீட்டுக்குள் புகுந்து தனது தாயைக் கொன்று விட்டதாக கூறியுள்ளான்.
அவனது உடலில் ஏன் ரத்தக் கரை இருக்கிறது என்று கேட்டதற்கு பயந்துபோய் பைப் வழியே இறங்கி வந்ததில் அடிபட்டுவிட்டது என்று கூறியுள்ளான்.
இதனையடுத்து பொலிஸ் நடத்திய விசாரணையில், தனது தாயை தானே கொடூரமாகக் கொன்றதை அவன் ஒப்புக் கொண்டான். அதன் பிறகு அவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக