வவுனியாவில்14 வயதில் காணாமல் போனவர் 22ஆவது வயதில் வீடு திரும்பினார்
வவுனியாவில் 8 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மீண்டும் திரும்பிவந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஷ்குமார் என்பவரே இவ்வாறு காணாமல் போன நிலையில் இம்மாதம் 8ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.
இவர் கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி தனது தாயாருடன் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த வேளையிலேயே காணாமல் போயிருந்தாரெனவும் இது தொடர்பில் இவரது தாயார் செட்டிகுளம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தாரெனவும் பொலிஸார் கூறினர்.
இவர் 14 வயதில் காணாமல் போன நிலையில் 22ஆவது வயதில் திரும்பியுள்ளார்.
இவர் கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இதுவரை காலமும் பணியாற்றிவந்ததாக இவ்விளைஞர் கூறியதாகவும் பொலிஸார் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக