புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இளம்பெண்கள், சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்த சீன ஓவியருக்கு மரண தண்டனை விதித்து சீன கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ஓவிய பயிற்சி மையம்
நடத்தி வந்தவர் ஹு. இவரது மையத்தில் படிக்க வரும் இளம்பெண்கள், பள்ளி மாணவிகளுடன் நட்புடன் பழகுவார். அவர்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வார். பின்னர் இளம்பெண்களின் படத்தை கம்ப்யூட்டர் மூலம் மார்பிங் செய்து ஆபாச ஸ்டில்களாக மாற்றுவார். இதை அவர்களிடம் காட்டி மிரட்டுவார்.

தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் அந்த படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மானத்தை வாங்கிவிடுவேன் என மிரட்டுவார். இவ்வாறு மிரட்டியே பல இளம்பெண்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். அவர்களுக்கு தெரியாமல் ஓட்டல் அறையில் மினி வீடியோ கேமரா வைத்து படம் எடுத்துள்ளார். அதை காட்டியும் மிரட்டி அந்த பெண்களுடன் பலமுறை செக்ஸ் வைத்துள்ளார்.

2005ம் ஆண்டு முதல் 2011 வரை 23 பெண்களை அவர் மிரட்டி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இதில் 4 பேர் சிறுமிகள். ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். சுஸ்ஹு நகர கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்து கோர்ட் நேற்று தீர்ப்பு கூறியது. 23 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த ஹுவுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளதாக ஹு தரப்பினர் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top