புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இது புதுவழி... என் சுயநலத்திற்காக நான் எடுத்துக் கொண்ட தனி வழியல்ல! நேற்றைய பிரஸ்மீட்டில் கமல் வாயிலிருந்து மிக திட்டமிட்டு வெளிவந்த இந்த வார்த்தைகள் இவை.


இது யாருக்கு புரியாமலிருந்தாலும், கமலின் நாற்பதாண்டு கால நண்பர் ரஜினிக்கு புரியாமலிருக்காது என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ´என் வழி தனீ வழி´ என்று முழக்கமிடும் ரஜினி, கமல் விஷயத்தில் அமைதிகாப்பது ஒட்டுமொத்த திரையுலகத்தையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

´கமல் என் நண்பன். அவருக்கு ஒரு பிரச்சினைன்னா நான் பார்த்துகிட்டு இருக்க முடியாது´ என்று ஒருவார்த்தை ரஜினி வாயிலிருந்து வந்திருந்தால், மிச்சத்தை அவரது இரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அந்தளவுக்கு ரஜினியை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது இரசிகர்கள். ஆனால் பின்னாலேயே வரப்போகிற கோச்சடையானுக்காக தப்பி தவறி கூட இந்த விஷயம் குறித்து வாயை திறக்காத ரஜினி மீது கமலுக்கு கோபம் இருந்திருக்கலாம்.

அதனால்தான் இப்படி ஒரு பஞ்ச் டயலாக்கை மிக திட்டமிட்டு பேசியிருக்கிறார் அவரும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top