ஒரே நேரத்தில் 6 பேரை கல்யாணம் செய்த 56 வயது சவூதி நாட்டவருக்கு 120 கசையடிகளை வழங்க அந்த நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் ஜிஸான் பிராந்தியத்தில் உள்ள அல் மஷார்ஹா பகுதியைச் சேர்ந்தவர் இவர். அரசு
நிறுவனம் ஒன்றில் அவர் பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில் ஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அல் மஷார்ஹா கோர்ட் இவர் மீதான வழக்கை விசாரித்து, ஒரே நேரத்தில் 6 கல்யாணம் செய்ததற்காக ஒரு மனைவிக்கு 20 கசையடிகள் வீதம் மொத்தம் 120 கசையடிகளை இவருக்குத் தண்டனையாக வழங்கி தீர்ப்பளித்தது.
மேலும், திருக்குரானின் 2 அதிகாரங்களை இவர் மனப்பாடம் செய்து சொல்ல வேண்டும் என்பதும் தண்டனையின் ஒரு பகுதியாகும். இதுதவிர ஐந்து ஆண்டுகளுக்கு வெளிநாடு போகவும் இவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போக, மசூதிகளில் நடைபெறும் முக்கியத் தொழுகை நிகழ்ச்சிகளில் இவர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தண்டனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக