இந்தியாவில் சவுதி ஷேக்குகளுக்கு "தற்காலிக மனைவி" சப்ளை என்ற பெயரில் தொடர்ந்தும் செய்திக்களை வெளியிட்டு வருகின்றனர்
ஆங்கில மாலை நாளிதழின் (MID DAY) பெண் நிருபர் கிராந்தி விபுதேயும் ஆண் நிருபர் பூபன் படேலும் ஒரு மாதத்திற்கும் மேலாக உளவு பார்த்து அரபு ஷேக்குகளின் லீலைகளை அம்பலப்படுத்தியதாக இவர்கள் அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தியின் சுருக்கமும், வீடியோவும் கீழே தமிழாக்கம் செய்யபட்டு வெளியிடப்பட்டுள்ளது..
அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் வெறியை தணித்து கொள்ள இந்திய பெண்களை திருமணம் செய்து கொள்வதும் இச்சை முடிந்ததும் அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வரும் அரபு நாட்டு ஆண்கள் சிலர், மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையிறங்கியதும் பெண் தேடும் படலத்தை தொடங்கி விடுகின்றனர்.
அதற்காகவே உள்ள சில புரோக்கர்கள் அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு பெண்களை கூட்டி செல்கின்றனர்.
இவ்வாறே தங்களுக்கு பிடித்தமான பெண்களை அரபு ஷேக்குகள் தெரிவு செய்கின்றனர்.எல்லாம் முறைப்படியே செய்ய வேண்டும் என விரும்பும் ஷேக், அந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.
திருமணத்தை மதகுரு நடத்தி வைக்கிறார். அதற்கு முன்பு ரூ.15 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பேசப்பட்டு பெண்ணுக்கு கைமாறி விடுகிறது.
மேலும் எத்தனை நாட்களுக்கு ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்ட பின், ஷேக்கின் மனைவியாக இந்திய பெண் மாறுகிறாள்.
அந்த பெண்ணுடன் இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள், முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ஷேக், அந்த பெண்ணை தன் இச்சைக்கு விருப்பம் போல பயன்படுத்துகிறார்.
தன் விசா காலம் ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ முடியும் போது திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து விவாகரத்தும் செய்து விடுகிறார்.
விவாகரத்தும் சில வினாடிகளில் முடிந்து விடுகிறது. குறிப்பிட்ட காலம் மட்டும் அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண் கசக்கி வீசப்படுகிறாள்.
இதில் கொடுமை என்னவென்றால் அரபு ஷேக்கிடம் சிக்கும் பெண்ணுக்கு அவள் பெறும் பணத்தில் கொஞ்சமே கிடைக்கிறது.
50 சதவீத பணத்தை திருமணம் மற்றும் விவாகரத்தை செய்து வைக்கும் மதகுரு எடுத்து கொள்கிறார்.
மீதமுள்ளதை பெண்ணும் அவளை, ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த அநியாயம் மும்பை, ஐதராபாத் நகரங்களில் வெகுசாதாரணமாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக