ரிசானா நபீக்குக்கு தமது நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்காக உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் சவூதி அரேபியா தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
குழந்தை ஒன்றை கொலை செய்தமைக்காகவே
ரிசானாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக சவூதி அரேபியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ரிசானா நபீக் பணிப்பெண்ணாக சவூதிக்கு வந்த ஒருவாரத்தில் இந்தக்கொலை இடம்பெற்றது.
கடவுச்சீட்டின்படி ரிசானா கொலையை மேற்கொண்ட போது அவருக்கு 21 வயதாகும். எனவே அவர் 17 வயதானவர் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
அத்துடன், சிறுமிகள் பணிக்கு அமர்த்தப்படுவதை சவூதி அரேபியா ஏற்றுக்கொள்வதில்லை என்று சவூதி அரச உத்தியோகபூர்வ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதி அரசாங்கம், இறந்துபோன குழந்தையின் பெற்றோரை இணங்கச்செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அவர்கள் ரிசானாவை மன்னிக்க வாய்ப்பில்லை என்று அறிவித்து விட்டனர்.
இந்தநிலையில் சவூதி அரேபியா அனைத்து விதமான மனித உரிமைகளையும் மதிக்கிறது.
எனினும் தமது நாட்டின் நீதித்துறையில் எவரும் தலையிடுவதை ஏற்கமுடியாது என்று சவூதி அரசாங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக