தனிமையிலிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பயமுறுத்தி அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முகமூடியணிந்திருந்த நபரை பதுளைப் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
பதுளைப் பகுதியைச் சேர்ந்த உடுவரை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடுவரை என்ற இடத்தின் வீடொன்றில் ஏனையவர்கள் மரண வீடொன்றிலிருந்தமையினால் 58 வயது நிரம்பிய இரு பிள்ளைகளுக்கு தாயாரான மேற்படி பெண் மாத்திரமே வீட்டிலிருந்துள்ளார்.
அவ்வேளை உறவினர் போன்று குரல் கொடுத்து, அந்நபர் கதவைத் தட்டிய போது கதவைத் திறக்க, கத்தியை காட்டி பயமுறுத்தி அப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்.
காட்டப்பட்ட கத்தியை அப்பெண் பிடிக்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக அப்பெண் காயத்திற்குள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
குறித்தப் பெண் செய்த முறைப்பாட்டினையடுத்து உடுவரையைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக