புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



திருமண ஆசைகாட்டி சீரழித்து பலமுறை கர்ப்பத்தை கலைத்துவிட்டு தன்னை ஏமாற்றிய பாதிரியார் மீது நர்ஸிங் மாணவி சென்னை போலீஸ் கமிஷனர்


அலுவலகத்தில் புகார் கொடுத்தார். விழுப்புரத்தைச் சேர்ந்தவர் காவ்யா(25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து பாதிரியார் மீது புகார் கொடுத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

என் தந்தை ஒரு விவசாயி. அவருக்கு என்னையும் சேர்த்து 7 பிள்ளைகள். நான் பி.எஸ்.சி. நர்சிங் படித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்தபோது வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த அந்தோணி ஜோசப்(31) என்பவர் அவரது பெரியம்மா லூர்து மேரிக்கு சிகிச்சை அளிக்க என்னை அழைத்துச் சென்றார்.

அங்கிருந்து அவர் தினமும் என்னை தனது வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்து வருவார். அப்போது அவர் தன்னை மணக்குமாறு கேட்டார். முதலில் மறுத்தேன். உடனே அவர் நீ என்னை மணக்காவிட்டால் நான் அவர் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

அதன் பிறகு என்னை கட்டாயப்படுத்தி தனது காரில் 23-4-2012 அன்று மூணாறுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்க வைத்த அவர் குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து என்னை கற்பழித்துவிட்டார். மயக்கம் தெரிந்த பிறகு அவருடன் தகராறு செய்தேன். உடனே என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி என்னை சமாதானம் செய்தார். அவரது வார்த்தையை நம்பி நடந்த விஷயத்தை நான் யாரிடமும் கூறவில்லை.

இந்நிலையில் நான் கர்ப்பமானேன். மருத்துவரிடம் அழைத்துச் சென்று என்னை தனது மனைவி என்று கூறி கல்லூரியில் படிக்கும் சமயத்தில் குழந்தை வேண்டாம் என்று நினைக்கிறோம் என்று கூறி மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவை கலைத்தார். அதன் பிறகு அவர் தங்கி இருந்த மூலக்கடை அசிசி நகர், ஆலயத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று திருமண ஆசை காட்டி என்னை மீண்டும் சீரழித்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தோழியின் திருமணத்திற்காக வேலூர் கிளம்பினேன். அப்போது அவர் என்னை தனது காரில் அழைத்துச் சென்றார். வேலூரில் ஒரு அறை எடுத்து தங்கினோம். அப்போது அவர் எனது கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிவிட்டு என்னை மனைவி என்று கூறி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதன் பின்னர் தங்கத் தாலி வாங்கித் தருவதாகக் கூறி மஞ்சள் கயிற்றை அறுத்துவிட்டார். கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றோம். அதன் பிறகு கிண்டிக்கு சென்றோம். இரண்டு இடங்களிலும் கணவன், மனைவி என்று கூறியோ அறை எடுத்தோம். இந்த காலகட்டத்தில் 3 முறை கர்ப்பம் ஆனேன். ஆனால் இந்த விஷயம் தெரிந்தால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறியே கர்பத்தை கலைக்க வைத்தார். எனக்காக பாதிரியார் தொழிலையே விட்டுவிடுவதாக தெரிவித்தார்.

ஆனால் கடந்த சில வாரங்களாக என்னுடன் அவர் பேசவில்லை. இதையடுத்து அவரை தொடர்பு கொண்டபோது என்னை திருமணம் செய்ய மறுத்தார். மேலும் தனக்கு அதிகாரம் படைத்த பலரைத் தெரியும் என்றும், என்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார். அவருடன் சேர்ந்து அவரது தம்பியும் மிரட்டுகிறார். அதனால் திருமண ஆசை காட்டி என்னை சீரழித்த பாதிரியார் அந்தோணி ஜோசப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top