யாழில் அமைந்துள்ள பிரபலமான நிறுவனமொன்றில் 11 லட்சத்தி 3240 ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில்
முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள இந் நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை இரவு இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தில் காணப்பட்ட பணம் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக நிறுவன முகாமையாளர் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
திருட்டு சம்பவம் தொடர்பாக எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக