தனது பக்கத்து வீட்டில் குடியிருந்தவரின் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த ஒருவரை பஸ் நிலையத்தில் வைத்து அவரது சொந்த மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம்
ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை சுமார் 7.00 மணியளவில் பண்ணையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இளங் கணவனும் மனைவியும் போல ஆண்ணொருவரும் பெண்ணொருவரும் கொழும்பு செல்வதற்கான பஸ்ஸில் ஏறியுள்ளனர். நடத்துனரிடம் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் இருவரும் அருகருகில் உள்ள இருக்கைகளில் அமர்ந்திருந்துள்ளனர்.
சற்று நேரத்தில் அருகிருந்த ஆணிடம் சத்தமிட்டுக்கொண்டு பஸ்ஸின் உள்ளே தனது பெண் பிள்ளையுடன் வந்த இளம் பெண்ணொருவர் உரத்துக் கூச்சலிட்டுள்ளார்.
இதன்போது தான் தன்னுடைய மனைவியல்லாத ஒரு பெண்ணுடன் அவர் கொழும்பிற்கு செல்ல முயற்சித்துள்ளது தெரியவந்ததுள்ளது.
இதன் பின்னர் தான் இவரும் தனித்தனியாக திருமணம் செய்துள்ளனர் என்றும் இவரும் தனித்தனியாக பக்கத்து வீட்டில் குடியிருக்கின்றனர் என்று தெரியவந்தது.
இதன் பின்னர் சண்டை முற்றியதைத் தொடர்ந்து குறித்த குடும்பத்தர் தனது சொந்த மனைவியுடன் பிள்ளையுடனும் வீட்டிற்கு திரும்பிச் சென்றார். அவருடன் வந்த பெண்ணும் பஸ்ஸில் இருந்து இறங்கிச் சென்றுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக