கனடாவில் நோவா ஸ்கோஷியாவிர் பள்ளி ஆசிரியையாகப் பணி புரியும் நிகோ டூசே(Nicole Doucet) தனது கணவரை அடியாள் வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
நிகோ டூசே குறித்த அடியாளிடம் இதைப் பற்றிப் பேசிய சம்பவத்தை யாரோ காணொலியாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதால் காவல்துறையினர் அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
நிகோல் டூசே அடியாளாகத் தெரிவு செய்தவர் மாநிலக் காவல் துறையைச் சேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நிகோல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
2008 மார்ச் 27ம் திகதியன்று வெளியிடப்பட்ட காணொலியின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. ஆனால் உச்ச நீதிமன்றம் இப்போது இந்த வழக்கை விசாரிக்க தடை விதித்துள்ளதுடன், மேலும் காவல்துறையினரிடமும் இந்த வழக்கை நடத்த வேண்டாம் என்று தெரிவித்து விட்டது.
தனது கணவர் ரேயானிடம்(Ryan) தனக்கும் தனது 12 வயது மகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை நீதிமன்ற விசாரணையிலும், மாநிலக் காவல்துறையினரிடம் நிக்கோல் கூறியுள்ளார். ஆனால் அவரது மகள் தன் தந்தையுடன் தான் வசிக்கிறாள்.
ரேயானுக்கு நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளிக்க வாய்ப்புத் வழங்கவில்லை. நிகோலை கைது செய்த பொலிசார் அவருக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக