புத்தரின் உருவத்தை கழுத்தின் பின்புற பகுதியில் பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கண்டி நகர வீதியில் குறித்த பெண் பயணித்துகொண்டிருந்தபோது நகரவாசிகள், இப்பெண்ணின் கழுத்தின் பின்புற பகுதியில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பெண் கண்டி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம், இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளதாகவும், விசா முடிவடைந்த பின்னரும் தொடர்ச்சியாக தங்கியிருந்துள்ளார் எனவும் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக