புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வரதட்சணை கொடுக்காத மனைவியை பணத்திற்காக வேறொருவருக்கு விற்ற,  கணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பீகார் மாநிலம், ஆர்வால் மாவட்டத்தில் பரசுராம்பூர் என்ற ஊரில்,புலின் சர்மா என்ற இளைஞனுக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த பெண்ணுக்கும், 2011ல் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின், குறிப்பிட்ட நகை, பணம் வரதட்சணையாக கொடுப்பதாக, பெண்ணின் பெற்றோர் உறுதியளித்தனர். தவிர்க்க முடியாத காரணத்தால், அவற்றை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால், அந்த பெண்ணை, அடித்து துன்புறுத்திய கணவன் புலின் சர்மா, அந்த பெண்ணை விற்று பணம் பார்க்க திட்டமிட்டான்.

"பக்கத்து ஊருக்கு சென்று வருவோம், வா´ என, மனைவியை அழைத்து சென்ற அந்த புலின், விஜய் சிங் என்பவரின் வீட்டில், மனைவியை விட்டு விட்டு ஓடிவிட்டார்.

கணவன் வருவான் என, காத்திருந்த மனைவிக்கு பின்னர், தான் விற்கப்பட்ட விவரம் தெரியவந்தது. தனியறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்த பெண், அங்கிருந்து தப்பி, பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்து மகளை அழைத்து சென்ற பெற்றோர், மருமகன் மீது, ஜகானாபாத் பொலிசில், புகார் கொடுத்தனர்.

இதன்பின்னர் தலைமறைவாக இருந்த புலின் சர்மா கைது செய்யப்பட்டதோடு, விற்கப்பட்ட பெண்ணுக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top