மலேசியாவில் சிறுமிகளை கத்தியை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 115 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள சபா பகுதியை சேர்ந்தவன் ரபிதின் சடிகர். 42 வயதான இவன் கடந்த 2009ம் ஆண்டு 9 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்தான்.
தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின்னர், கத்தி முனையில் 16 வயது பெண்ணை மிரட்டி கற்பழித்த குற்றத்துக்காக இவனை பொலிசார் தேடி வந்தனர்.
இதனால், சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு இடத்துக்கு சென்ற இடத்திலும் ஒரு 8 வயது சிறுமியையும், பின்னர் 17 வயது இளம்பெண்ணையையும் வழக்கமான பாணியில் இவன் மிரட்டி கற்பழித்துள்ளான்.
மேலும், ஒரு சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபட்ட இவனை பொலிசார் கைது செய்து ரவ்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தொடர்ச்சியாக மைனர் பெண்களை கற்பழித்த குற்றத்துக்காக இவனுக்கு 115 ஆண்டு சிறை வாசமும் 50 கசையடியும் தண்டனையாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக