புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே ஒருதலை காதலால், பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட, இரு குழந்தைகளின் தந்தை
மீது, மண்ணெண்ணெய் தெறித்ததில், அவரும் கருகி இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி படிக்காசுவைத்தான் பட்டி குருநாதசுவாமி கோயில் தெருவை சேர்ந்த ராமசாமி மகள் ராஜேஸ்வரி, 17. வன்னியம்பட்டி தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்தார். அதே தெருவைச் சேர்ந்த, மில் தொழிலாளியான ஆதிசக்தி குழந்தைவேலு, 35, ராஜேஸ்வரியை ஒருதலையாக காதலித்து வந்தார். இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே ராஜேஸ்வரி, செய்முறை தேர்விற்கு செல்ல, தன் தங்கை கவிதாவுடன், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள புதரில் இருந்து வந்த, ஆதிசக்தி குழந்தைவேல், ராஜேஸ்வரியை தூக்கியபடி, மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் தன் தாய் வீட்டிற்குள் சென்று, இரு கதவுகளை பூட்டினார்.

அலறிய ராஜேஸ்வரி மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மண்ணெண்ணெய் ஊற்றியபோது, ஆதிசக்தி குழந்தைவேலு மீதும் பட்டதில், அவரும் காயம் அடைந்தார். அப்பகுதியினர், கதவை உடைத்து பார்த்தபோது, சம்பவ இடத்தில் ராஜேஸ்வரி இறந்து கிடந்தார்.காயம்பட்ட ஆதிசக்தி குழந்தைவேலு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

கதவுகளை அடைத்தார் :

கவிதா கூறுகையில், “”எனக்கு பின்னால், ராஜேஸ்வரி வந்தாள். திடீரென காணவில்லை. திரும்பி பார்த்தபோது அவளை, ஆதிசக்தி குழந்தைவேலு குண்டுகட்டாக தூக்கி சென்று, வீட்டின் கதவுகளை அடைத்தார். “காப்பாற்றுங்கள்’ என, ராஜேஸ்வரி கதறினார். அலறல் சத்தம்கேட்டு, கதவை உடைத்து பார்த்தபோது, கருகிய நிலையில் இறந்து கிடந்தாள்,” என்றார். இது தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

காதலி யாருக்கும் கிடைக்க கூடாது : மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த, ஆதி சக்தி குழந்தைவேல், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவர், 100 சதவீத பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்தார். இவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் போது, சத்தமாக புலம்பியப்படி இருந்தார்.

அப்போது போலீசார் மற்றும் உறவினர்களிடம் அவர் கூறுகையில், “”இரு ஆண்டுகளாக, ராஜேஸ்வரியை காதலித்தேன். எனக்கு கிடைக்காத இவர், வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தேன். அவள் இறந்த பின், நானும் உயிர்வாழ விரும்ப வில்லை. என்னை ஊசி போட்டு கருணை கொலை செய்யுங்கள். இனி நான் வாழ விரும்ப வில்லை,” என்றார். மாலை, 4:30 மணிக்கு, அவர் இறந்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top