புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரகாஷ்ராஜ் 'ஓங்கோல் ஹிட்டா' என்ற படத்தில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் பல்வேறு அமைப்புகள் பிரகாஷ்ராஜை கண்டித்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளன.

இதுவரை வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் முதன்முறையாக நிர்வாண காட்சியில் தோன்றி உள்ளார்.

இந்த நிர்வாண காட்சிக்காகவே தணிக்கை குழு படத்துக்கு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் நான், பகலில் நல்லவனாக இருப்பேன், இரவில் கெட்டவனாகி விடுவேன். இரவு நேரத்தில் ஆடைகளை அவிழ்த்து எரிந்து விட்டு நிர்வாணமாக இருப்பேன்.

இதுவரை இப்படி கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை. வித்தியாசமான வேடமாக இருந்ததால் நிர்வாணமாக நடிக்க சம்மதித்தேன்.

இதை சில அமைப்புகள் எதிர்க்கின்றன. போராட்டத்துக்கும், அழைப்பு விடுத்துள்ளன. நிர்வாணமாக நான் நடித்தது துணிச்சலான காரியம்.

இதை படத்தில் பார்ப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்றும் ஆனால் படம் முழுவதையும் பார்த்த பின்பு அதை புரிந்து கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top