புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாகிஸ்தானின் முசாபர்கர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா குஜராத் பகுதியை சேர்ந்த முஹம்மது நவாஸ், அதே பகுதியை சேர்ந்த பிலால் என்பவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

இதனால் முஹம்மது நவாசை அடித்து, உதைத்து பஞ்சாயத்தாரிடம் இழுத்துச் சென்ற உறவினர்கள், முஹம்மது நவாசின் மனைவி கல்சூம் மய் என்பவரை பஞ்சாயத்துக்கு வரவழைத்தனர்.

தங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழிக்குப்பழியாக முஹம்மது நவாசின் மனைவியை நிர்வாணப்படுத்தி தண்டிக்க வேண்டும் என அவர்கள் பஞ்சாயத்தாரிடம் கேட்டுக் கொண்டதையடுத்து, கல்சூம் மய்யை நிர்வாணப்படுத்தி பஞ்சாயத்தார் தண்டனை வழங்கினர்.

இச்சம்பவத்தை பற்றி கல்சூம் மய் அளித்த புகாரின் அடிப்படையில் கஸ்பா குஜராத் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிலாவின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த குற்றத்துக்காக முஹம்மது நவாசின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top