புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தொடர்ந்து 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளுக்கு ஒருவரையொருவர்
கட்டித்தழுவியபடி, தொடர்ந்து முத்தங்களை பரிமாறி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்ஒரு தம்பதியினர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் காதலர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நீண்டநேர தொடர் முத்தம் தந்து சாதனை படைக்கும் ‘கிஸ்ஸத்தான்' போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இரண்டரை நாட்களுக்கு தொடர்ந்து முத்தமிட்டு சாதனை படைத்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளனர் ஒரு தாய்லாந்து தம்பதியர்.

இதற்கு, சாதனையின் நிறைவு நேரம் வரை நின்றபடியே இருக்க வேண்டும். உணவு மற்றும் திரவ பானங்களை உறிஞ்சுகுழல் (ஸ்டிரா) மூலமாக தான் உட்கொள்ள வேண்டும். இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும் பொருத்திய உதடுகளை பிரிக்கக்கூடாது போன்ற பல நிபந்தனைகள் உண்டு.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் எக்காச்சாய் திரணார்த் (44) என்பவர் தனது மனைவி லக்சனா (33)வுடன் இந்தப் போட்டியில் களமிறங்கினார்.

58 மணிநேரம் 35 நிமிடங்கள்
இவர்கள் கின்னஸ் சாதனைகளை பதிவு செய்யும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளுக்கு ஒருவரையொருவர் கட்டித்தழுவியபடி, தொடர்ந்து முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.

முந்தைய சாதனை முறியடிப்பு
இந்த தம்பதியர், முந்தைய நீண்ட, நெடிய முத்த சாதனையை விட 8 மணி நேரம் அதிகமாக முத்தமிட்டு புதிய சாதனையை படைத்துள்ளனர்.

வைர மோதிரம் பரிசு




சுமார் 2 1/2 நாட்களாக நின்ற நிலையில் இந்த தொடர் முத்த சாதனையை படைத்த இவர்களுக்கு 2 வைர மோதிரங்களும், 3 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top