புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமமொன்றில் பகல் வேளையில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நேற்று உப்பூறல் என்ற கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தங்கராசா பூமணி (வயது 60) என்ற பெண்ணே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கிராமத்திற்குள் புகுந்த யானையினை கிராமவாசிகள் மிரட்டியபோது, உப்பூறல் களப்பில் இறால் பிடித்துக்கொண்டிருந்த இந்தப் பெண்ணை தாக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் இத்தாக்குதலின்போது அப்பெண் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கல்லாம்பத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top