புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குழந்தை ஒன்றை பிறந்த உடனேயே கொலை செய்த குற்றச்சாட்டில் அக்குழந்தையின் தாய், தந்தை உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம், சவிவபுர பிரதேசத்தில் நேற்று (18) இரவு குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இக் கொலைச் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை, குழந்தையின் பாட்டி மற்றும் அவர்களது அயலவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்னர். 

அதிக இரத்தப் பெருக்கு காரணமாக உயிரிழந்த குழந்தையின் தாய் புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த பெண்ணை பரிசொதித்த வைத்தியர்கள் அவருக்கு குழந்தை கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ளனர். 

இதன் பின்னதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் குழந்தை பிற்தமையின் காரணமாக இவ்வாறு செய்துள்ளதாக வைத்தியசாலையிலிருந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. 

வெளிநாடொன்றிற்கு வேலைக்காக அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிலையில் குழந்தை இருக்கும் பட்சத்தில் வெளிநாடு செய்ய முடியாது என கூறி குழந்தையை பிறந்த உடனேயே கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. 

இதன்காரணமாக பிறந்த குழந்தையை துவாய் ஒன்றினால் சுற்றி வீட்டிற்கு அருகிலுள்ள மலசலகுழிக்குள் போட்டுள்ளனர். 

வீட்டு சூழலை சோதனையிட்ட பொலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த பெண் பொலிஸ் பாதுகாப்புடன் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top