புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கண்டனம் படத்தின் ஹீரோயின் நடிகை ஜீட்டா மரியாவை சில இளைஞர்கள் நள்ளிரவில் துரத்தினர்.
நடிகை பயந்துபோய் ஹோட்டல் அறைக்குள் நுழைய, இளைஞர்கள் அறையை முற்றுகையிட்டனர்.
 இதனால் ஹோட்டல் சிப்பந்தியுடன் கைகலப்பு ஏற்பட்டு, போலீஸார் தலையிட்டு வழக்குப் பதிவு செய்தனர்.

கண்டனம் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் மூன்று ஹீரோயின்களில் ஒருவர் ஜீட்டா மரியா.

நேற்று கவர்ச்சியாக உடையணிந்து சில காட்சிகளில் நடித்தார். பின்னர் அதே உடையுடன் தான் தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு வெளியே நின்றிருந்தார்.

அந்த ரிசார்ட்டில் நடந்த மதுவிருந்துக்கு வந்திருந்த சில இளைஞர்கள் ஜீட்டா மரியாவைப் பார்த்து, ஆபாசமாக கிண்டலடித்தார்களாம். அவரை நெருங்கி வந்து சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

உடனே ஜீட்டா மரியா அங்கிருந்து ஓடி தன் அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாராம். ஆனால் நடிகையைப் பார்த்த வெறியிலிருந்த இளைஞர்கள், அந்த அறையை முற்றுகையிட்டனர். ஜீட்டா வெளியில் வந்து தங்களுடன் ஜாலியாக இருந்தால்தான் போவோம் என்று சத்தம் போட்டார்களாம்.

இதனால் பயந்து போன ஜீட்டா, தான் நடிக்கும் படத்தின் ஹீரோக்களில் ஒருவரான விஷாலை உதவிக்கு அழைத்துள்ளார். பக்கத்து அறை ஒன்றிலிருந்து அந்த ஹீரோ, ஹோட்டல் சிப்பந்தியை அழைத்துக் கொண்டு ஹீரோயின் அறைக்கு வந்துள்ளார். நடிகை கதவைத் திறந்ததும் ஹீரோவை முந்திக் கொண்டு இளைஞர்கள் பாய, அதைத் தடுக்க சிப்பந்தி முயல, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த ஈஞ்சம்பாக்கம் போலீசார், இளைஞர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top