நாளொன்றுக்கு 6 கலன் தண்ணீர் குடிக்கும் அதிசய பெண்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பழமொழி. உணவு மட்டுமல்ல நீரும் கூட அளவுடன்தான்
பருகவேண்டும். ஒரு மனிதன் சராசரியான ஒரு நாளைக்கு இவ்வளவு நீர் அருந்த வேண்டும் என வைத்திய ரீதியாக ஒரு அளவு இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக உள்ளார் ஒரு பெண். இவரைப்பற்றி வினோதமான செய்தியே இன்று.
லண்டனைச்சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் கென்னடி என்கின்ற பெண். இவர் சிறுவயதில் இருந்தே அதிகளவு தண்ணீர் குடிப்பது வழக்கம். இதுவே நாளடைவில் தண்ணீருக்கு அடிமையாக மாற்றிவிட்டது. இதன் பிரதிபலன் இன்று இப்பெண் நாளொன்றுக்கு 6 கலன்கள் கொண்ட நீரை அருந்துகிறார். இவருக்கு தற்போது 26 வயதாகறது.
இது பற்றி இவரின் தயார் குறிப்பிடுகையில் இதுவரை இவர் எந்தவித உடல் உபாதைகளுக்கும் உள்ளாகவில்லை எனவும் நாளாந்தம் இரவு பகல் பாராது இவர் 6 கலன்கள் தண்ணீரை அருந்துவதாகவும் 40 தடவைகள் சிறுநீர் கழிப்பதாகவும் குறிப்பிட்டார். எனினும் இது இவரது உடல் நிலைக்கு உகந்ததல் எனவும் இதனால் இவரது உடற்கலங்கள் பாதிப்படைந்து மரணம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடுகின்றனர் வைத்தியர்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக