சுவிஸ் ரயில் நிலையங்களில் இலவச இணையதளச் சேவை
சுவிஸ் கூட்டரசு ரயில்வே அடுத்த மூன்றாண்டுகளுக்குள் தனது நூறு ரயில் நிலையங்களிலும் இலவச இணையதள சேவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே தலைமை நிர்வாகி ஆண்ட்ரேயஸ் மேயர்(Andreas Meyer) கூறுகையில், முதலில் இந்த ஆண்டில் இருபது ரயில் நிலையங்களுக்கு Wifi வசதி செய்துதரப்படும் என்றும் மற்ற ரயில் நிலையங்களுக்கு இந்த வசதி வருகின்ற 2015க்குள் கிடைக்கும்.
இதை தொடர்ந்து ரயில் போக்குவரத்து கட்டணம் மற்றும் முக்கிய தடங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்த இலவச சேவையின் மூலம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ரயில்வே செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் கின்சிக்(Christian Ginsig) கூறுகையில், நாட்டின் மிக பரபரப்பான ரயில்வே நிலையமான சூரிச், வருகின்ற 2014க்குள் இந்த இலவச இணையதள வசதியை பெற்றுவிடும்.
எனவே இலவச இணையதள சேவைக்கான தொழில்நுட்ப வசதிகளைச் செய்துதரப்போவது யார் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டுயிருப்பதாக ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக