புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தற்காலத்தில் ஆண்களுக்கோ சரி பெண்களுக்கோ சரி தினமும் பல்வேறு மனிதர்களுடன் சந்திப்புகளும், அதில் பிடித்தவருடன் தொடர்புகளும் ஏற்படுகின்றன.


இத்தகைய தொடர்புகள் நாளடைவில் கள்ளக்காதலாக மாற வாய்ப்புள்ளது.

கள்ளதொடர்புகளை கண்டறிவதற்கான வழிமுறைகள் கீழே தொகுக்கப்படுகின்றன.

1. உங்கள் துணையின் நடவடிக்கைகளில் ஏற்படும் அனைத்து விதமான மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். அதாவது, அவர்கள் இதுவரை உங்களுடன், நடந்து கொண்டிருந்த விதத்திற்கும், மாற்றத்தின் பின் நடந்து கொள்ளும் விதத்திற்கும் வித்தியாசம் நன்கு தெரியவரும். உதாரணமாக, அவர் உங்களுடன் குறைவான நேரத்தை செலவழிப்பது, அடிக்கடி வெளியே போய்விடுவது போன்றவை.

2. காதலிப்பவர்கள் அடிக்கடி ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொள்வது சகஜமானது. அந்த வகையில் உங்கள் துணை உங்களை நேசிக்கிறேன் என்று சொல்ல தவறலாம் அல்லது நீங்கள் அப்படி சொன்னதற்கு பதில் தர தவறியிருக்கலாம்… அல்லது உங்களுக்கு ‘நானும் உன்னை நேசிக்கிறேன்’ என்ற பதில் மட்டும் கிடைக்கலாம்! இந்த மாதிரியான செயலும் ஏமாற்றத்திற்கான செயல்கள் தான்.

3. உங்கள் பெயரை சொல்வதில் குழப்பமடையலாம். உங்கள் பெயரையோ அல்லது உங்களுக்கு பிடித்த விஷயத்தை சொல்லவோ வெகு நேரம் எடுத்துக் கொள்ளலாம்.

4. அவர்களுடைய தொலைபேசியை சோதனை செய்யுங்கள். உண்மையில், தொலைபேசியை சோதனை செய்தால், உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை நிச்சயம் கிடைக்கும். ஆகவே ஒரே ஒருமுறை அதனை சோதனை செய்யுங்கள்.

5. அவர்களுடைய வழக்கமான விஷயங்களில், அவர் என்ன செய்தாலும் அல்லது என்ன செய்ய வேண்டியிருந்தாலும், அதனை நீங்கள் எப்பொழுதும் உங்கள் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் கொண்டு வார வேண்டும். அதற்கு அவருடன் நெருக்கமாக இருந்து கண்காணிக்க வேண்டும்.

6. உங்கள் துணையை இரகசியமாக நிழல் போலவோ அல்லது பின் தொடர்ந்தோ செல்லலாம்.

7. உங்கள் துணையின் நண்பர்களுடனோ அல்லது உங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்களுடனுன் பேசுங்கள். அப்பொழுது உங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும். இதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top