புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


45 வயதுப் பெண்மணி தன்னைவிட 15 வயது குறைந்த வாலிபருடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இதை அறிந்த அந்தப் பெண்ணின் மருமகன் தனது மனைவியை தாய் வீட்டுக்கு
அனுப்பிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த 45 வயதுப் பெண் வாலிபரை உதறினார். இதனால் ஏமாற்றமடைந்த அந்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் வந்து அப்பெண்ணை தன்னிடமி்ருந்து பிரிக்கக் கூடாது என்று கெஞ்சியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய். 30 வயதான இவர் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது பன்னீர்செல்வம் என்பவரின் மனைவியான 45 வயது சசிகலாவுடன் தொடர்பு ஏற்பட்டது. சசிகலா தனது மகள் ஜோதியை ஏற்கனவே தினேஷ் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டார்.

வயது வித்தியாசம் பார்க்காமல், மகள் இருப்பதை மறந்து விட்டு விஜய்யுடன் இணைந்து வாழ ஆரம்பித்தார் சசிகலா. இந்த நிலையில் விஜய்க்கு வேலை இல்லாமல் போகவே இருவரும் விஜய்யின் சொந்த ஊருக்குப் போனார்கள். அங்கு போய் குடித்தனத்தைத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் ஜோதியின் கணவர் தினேஷுக்கு தனது மாமியாரின் செயல் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. இதையடுத்து தனது மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். தாயிடம் திரும்பி வந்த ஜோதியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சசிகலா. அவருக்குப் புத்தி வந்தது

இதையடுத்து ஆம்பூர் அனைத்து மகளிர்காவல் நிலையத்திற்குப்போய் விஜய்யிடமிருந்து தன்னைப் பிரித்து வைக்குமாறு கோரினார். போலீஸாரும் விஜய்யை அழைத்துப் பேசினர். ஆனால் தன்னால் சசிகலா இல்லாமல் வாழ முடியாது என்று கெஞ்சினார் விஜய். இதையடுத்து போலீஸார் விஜய்யை சமாதானப்படுத்திப் பார்த்தனர்.

இந்த விவகாரம் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top