புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகை ரீமா சென் கடந்த ஆண்டு டில்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஷிவ் கரன் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்
கொண்ட அவர் கருவுற்றார். 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது தமிழில் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் மட்டும் நடித்தார். அதன் பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த 22ந் தேதி அவருக்கு டாக்டர்கள் குழந்தை பிறப்புக்காக நாள் குறித்திருந்தனர். அன்று டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆன ரீமாவுக்கு பகல் 2 மணிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. கணவர் ஷிவ் கரன் சிங் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

இதுபற்றி அவர் கூறும்போது "ரீமாவைப்போல அழகான பெண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆண் குழந்தை பிறந்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரீமா பூரண உடல் நலம் பெற்றதும், மீண்டும் நடிப்பது பற்றி அவர்தான் முடிவு செய்வார்" என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top