அக்காவை பழிவாங்க 12 வயது தங்கையை கற்பழித்த 2 பேருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை
விதித்துள்ளது.டெல்லியைச் சேர்ந்தவர் மனோஜ். அவர் ஒரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அப்போது அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டடுள்ளது. அப்போதெல்லாம் அப்பெண் தனது தோழியுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து வந்துள்ளார். காவல் நிலையத்தில் தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த தனது காதலியின் தோழிக்கு பாடம் கற்பிக்க நினைத்தார் மனோஜ்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மாலை அவர் காதலியின் தோழியைத் தேடிச் சென்றார். ஆனால் அப்போது அவரின் 12 வயது தங்கை மார்க்கெட்டுக்கு செல்வதைப் பார்த்து அவரிடம் உன் அக்கா எங்கே என்று கேட்டுள்ளார். அக்கா வீட்டில் இருப்பதாக சிறுமி தெரிவித்துள்ளார். அப்போது மனோஜின் நண்பர் அமித் அங்கு காரில் வந்துள்ளார். உடனே மனோஜ் சிறுமியை காரில் கடத்திச் சென்று கற்பழித்தார். அதன் பிறகு அமித் அந்த சிறுமியை கற்பழித்துவிட்டு மங்கோல்புரி பகுதியில் இறக்கிவிட்டார்.
சிறுமியைக் காணாமல் அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். மனோஜ் போலீசாருக்கு தகவல் கொடுப்பவர் என்பதால் போலீசார் அவரிடமே சிறுமியின் இடத்தை கண்டுபிடிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியின் அக்கா போன் செய்தபோது அவர் தான் இருக்கும் இடத்தை தெரிவித்தார். அதன் பிறகு நடந்தவற்றை தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனோஜ் மற்றும் அமித் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி காமினி மனோஜுக்கு ஆயுள் தண்டனையும், அமித்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக