டீயில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து விட்டு, பின்னர் அதை வீடியோவில்
பதிவு செய்து அதைக் காட்டி என்னை மிரட்டி உறவு கொண்டார் தலைமைஆசிரியர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய வால்பாறை தலைமை ஆசிரியை போலீஸில் புகார் செய்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் உதயன். இந்த பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி வந்த ஆசிரியையுடன், தலைமை ஆசிரியர் நெருக்கமான கோலத்தில் இருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாயின.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி சோலையார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தலைமைஆசிரியர் உதயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை வால்பாறை போலீசார் கல்வித்துறை நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பேரில் கடந்த மாதம் 22-ந்தேதி இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தில் இருந்த தலைமை ஆசிரியர், இரண்டு ஆசிரியைகள் ஆகியோரை கல்வித் துறை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் அந்த ஆபாசப் படங்கள் வீடியோ வடிவில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு பின்னர் அடங்கியது. இந்த நிலையில், அந்த ஆபாச படத்தில் உள்ள ஆசிரியை, வால்பாறை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். அவர் கோவை மாவட்ட எஸ்.பியைச் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
அதில், தலைமையாசிரியர் உதயன் சோலையார் பள்ளியில் நான் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது சிறப்பு வகுப்பு இருப்பதாக வரச்சொல்லி எனக்கு டீ கொடுத்தார். அந்த டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னுடன் ஆபாசமாக இருப்பது போன்று படம் எடுத்துக்கொண்டார். அந்த படத்தை வைத்துக் கொண்டு என்னை மிரட்டி, உடலுறவு கொண்டார். மேலும் அந்த படத்தை வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டினார் என்று கூறியுள்ளார்.
இதன் பேரில் போலீஸார் தற்போது 4 பிரிவுகளின் கீழ் உதயன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உதயன் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக