கடந்த 2007ம் ஆண்டு பருத்தி வீரன் படம் மூலம் நடிகரானவர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி. அவரின் முதல் படமே அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. முதல் படத்திகே அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும்
கிடைத்தது.
கார்த்தி வரும் படங்களில் எல்லாம் நடிக்காமல் பார்த்து பார்த்து கதையை தேர்வு செய்து நடிக்கிறார். 2007ல் இருந்து இதுவரை அவர் பையா, சிறுத்தை, சகுனி உள்ளிட்ட 7 படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்தநிலையில் இளம் நடிகர்கள் பார்த்து பார்த்து நடிக்கக் கூடாது. பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது தான் அவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முக்கியமாக இரசிகர்களுக்கும் நல்லது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக்கு அறிவுரை கூறியுள்ளாராம்.
ரஜினியின் இந்த அறிவுரையை ஏற்று கார்த்தி இனி பல வகை கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
மசாலா படங்களில் நடித்து வந்த கார்த்தியை இனி வித்தியாசமான கதாபாத்திரங்களில் எதிர்பார்க்கலாம் என்கிறது கோடம்பாக்கம்.
0 கருத்து:
கருத்துரையிடுக