யாழில் 10 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் சுதுமலை பிரதேசத்தில் 10 வயது சிறுவனொருவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் இன்று பாடசாலைக்கு நண்பர்களுடன் சென்றிருந்த வேளை, கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் ஆணைக்கோட்டை 4ம் கட்டயைச் சேர்ந்த ஜேசுபாலன் சயந்தன்( வயது 10 ) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக