புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிட்சர்லாந்தில் பிணத்தின் அருகே ஒரு செவிலி சிரித்துபடி போஸ் கொடுத்த படம் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதைப் பார்த்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செயிண்ட் கேலனில்(Saint Gallen's) உள்ள அதிகாரிகள் செவிலியின் பெயர் குறிப்பிடாமல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த படங்களில் செவிலி ஒரு மருத்துவஊர்தியின் அருகே நிற்பது போலவும் துன்புறு புணர்ச்சியில் இன்பம் காண்பது போலவும் இந்தச் செவிலி தோற்றமளிக்கிறார் என்று ஊடகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து செவிலியர் கூட்டமைப்பு கூறுகையில், இந்தச் செவிலி மருத்துவத்தகுதி பெற்றவரா, கவனிப்பவரா அல்லது வெறும் உதவியாளரா என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை என்றும் இந்தச் செவிலியின் செயல் எங்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது எனவும் அறிக்கை வெளியிட்டனர்.

மேலும் இப்படிப் பட்டவர்கள் சுகாதாரத்துறையில் இருக்கக்கூடாது என்றும் செவிலியர் கூட்டமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top