ஈராக்கில் ஆற்றில் மிதக்கும் உல்லாச உணவகம் கவிழ்ந்ததில் 8 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் டைக்ரிஸ் ஆற்றில் மிதக்கும் உல்லாச உணவகங்கள் இயங்கி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, இந்த உணவகங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலையென மோதியது.
சுமார் 100 பேர் மட்டுமே அமர்ந்து உணவருந்தக் கூடிய இடத்தில் 150க்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் எல்லா மிதக்கும் உணவகங்களிலும் இட நெருக்கடி ஏற்பட்டது. எடை கூடியதால் ஜன்னலின் மீது நீரலைகள் மோதியதில் ஒரு உல்லாச உணவகம் ஒருபுறமாக சரிந்து கவிழ்ந்தது.
அந்த நேரத்தில் டைக்ரிஸ் ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் கவிழ்ந்த உணவகத்தில் இருந்தவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பெண்கள் மற்றம் குழந்தைகளின் கூக்குரல் அப்பகுதி எங்கும் எதிரொலித்தது.
மீட்புப் படையினர் வந்து தேடுதல் வேட்டை நடத்தியதில் இதுவரை 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணாமல் போன 9 பேரை டைக்ரிஸ் ஆற்றில் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக