மெலிசா நாட்டில் ஆறு குழந்தைகளை தீயிலிட்டுக் கொன்ற மூவர்
ஆறு குழந்தைகளை எரித்துக் கொன்ற மூவர் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு தற்பொழுது விசாரணை தொடங்கியுள்ளது.
சாட்சியான மெலிசா ஜான்(Melissa John) என்ற பெண் கைதாகியுள்ள தன் காதலனான பால் மோஸ்லீ(Paul Mosley), மைக் ஃபில்போட்(Mick Philpott) மற்றும் மேரீட் ஃபில்போட்டுடன்(Mairead Philpott) சேர்ந்து திட்டமிட்டதை நாட்டிங்ஹாம் நீதிமன்றத்தில் விளக்கிக் கூறியுள்ளார்.
மெலிசா நீதிமன்றத்தில் கூறுகையில், குழந்தைகள் உறங்கும் அறைக்குத் தீ வைத்துவிட்டு ஃபில்போட் தம்பதியர் வாசல் பக்கமாக வந்து உதவிகேட்டுக் கூக்குரலிடவேண்டும் என்றும் அந்த சமயத்தில் மோஸ்லீ பின்பக்கக் கதவு வழியாக வந்து அந்த குழந்தைகளை காப்பாற்றிவிட வேண்டும் என்று மூவரும் திட்டமிட்டுயிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பழியை ஃபில்போட்டுடன் முன்பு கள்ளத்தொடர்பு வைத்திருந்த லிசா வில்லிஸ் மீது சுமத்தவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்த குழந்தைகளில் ஐந்து பேர் ஃபில்போட்டுக்கும் லிசாவுக்கும் பிறந்தவர்கள். குழந்தைகளும் இறந்துபோய் அவர்களின் தாய் லிசாவும் கொலைக்குற்றத்துக்காகச் சிறைக்குப் போய்விட்டால் அக்குழந்தைகளுக்குச் சொந்தமான சொத்தைத் தாமே அனுபவிக்கலாம் என்று ஃபில்போட் தம்பதியர் ஆசைப்பட்டுள்ளனர்.
இதற்கு மோஸ்லீயைக் கூட்டுச் சேர்த்து கொண்டனர். மோஸ்லீக்குப் பெரிய வீடு வாங்கிக் குடிபோக வேண்டும் என்று ஆசை இருந்ததால் இவர்களின் சதித்திட்டத்திற்கு இணங்கியுள்ளான்.
ஆனால் குற்றம் சுமத்தப்பட்ட ஃபில்போட் தம்பதியும், மோஸ்லீயும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
இந்தத் தீ வைப்பில் ஆறு குழந்தைகள் விக்டரிசாலையிருந்த அந்த வீட்டிலேயே கருகிச் இறந்துள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக