போலி முகப்புத்தகக் கணக்கு - சிக்கலில் நடிகர், நடிகைகள்!
தமிழ் சினிமா நடிகர்கள், நடிகையர்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை உண்மை என்று நம்பி ஆயிரக்கணக்கான இரசிகர்கள் அதனை பின் தொடர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக அமலாபால், அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரின் பெயரிலும், நான் ஈ வில்லன் சுதீப்பின் பெயரிலும் கூட பல போலி அக்கவுண்டுகள் தொடங்கப்பட்டு பல தகவல்கள் அப்லோட் செய்யப்படுகின்றனவாம்.
இதனால் அதிர்ந்து போயுள்ளனர் நடிகர், நடிகைகள். சுதீப் ஃபேஸ்புக் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது. இது சர்ச்சையை ஏற்படுத்தவே அது குறித்து விசாரித்த பொலிசார், அது போலி என தெரிந்து கொண்டனர்.
உடனடியாக சுதீப் பிரஸ்மீட் வைத்து விளக்கம் சொல்லவேண்டியதாயிற்று.
இப்போது சில நடிக, நடிகைகள் பெயரில் எவ்வளவுபேஸ்புக் பக்கள் உள்ள என பார்ப்போம்....
அமலாபால்
இவர் பெயரில் 31 ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் தொடங்கப்பட்டுள்ளதாம். இந்த சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி தவறாக எதுவும் செய்தி வெளியிடாத காரணத்தால் அவற்றை கண்டு கொள்ளலாமல் விட்டு விட்டதாக கூறியுள்ளார் அமலாபால்.
அனுஷ்கா
இவரது பெயரிலும் எக்கச்சக்க போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அனுஷ்கா ஷெட்டி என்ற பெயரில் உள்ளது மட்டுமே உண்மையானதாம்.
நயன்தாரா
குயின் நயன்தாரா என்ற பெயரில் போலி அக்கவுண்ட் உள்ளது. இதில் உள்ள பதிவுகளை பார்த்து பலரும் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனராம். தவிர பட வாய்ப்பு தருவதாகவும் கூறவே அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கூறி வருகிறார் நயன்தாரா.
ஹன்சிகா
போலி அக்கவுண்ட்களை தொடங்கிய நபர்கள், ஹன்சிகாவின் ஃபேஸ்புக் பக்கத்திற்குள் நுழைந்து யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை மாற்றி விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதனால் அவசரம் அவசரமாக வேறு ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார்.
சசிகுமார்
இந்த விவாகாரத்தை எல்லாம் விட நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் பெயரில் இ.மெயில் ஐ.டி தொடங்கி பலருக்கும் மோசடியாக மெயில் அனுப்புகின்றனராம்.
நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலருக்கு அழைப்பு போகிறதாம். இதை அறிந்து பொலிசில் புகார் கொடுத்துள்ளார் சசிகுமார்.
0 கருத்து:
கருத்துரையிடுக