தைவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் -20 பேர் காயம்
தைவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்காசிய நாடான தைவானின் மத்தியப் பகுதிக்கு அருகே, பூமிக்கு அடியில் 15 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகிவுள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உயிர் மற்றும் பொருள் இழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை, எனினும் 20 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
தைவான், நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் பகுதியில் உள்ளதனால் இந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 1999ம் வருடம் 7.2 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியதில் 2400 பேர் இறந்தனர், மேலும் 50 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக