பிரேசிலில் தவறான சிகிச்சை அளித்து நோயாளிகளின் உயிரைப் பறித்த மருத்துவர்
பிரேசிலில் பெண் மருத்துவரான வர்ஜினியா சோயர்ஸ் டி சோஸா(Virginia soyars de Souza) நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்து ஏழு நபர்களின் மரணத்திற்கு காரணமானவர் என்ற
சந்தேகத்தின் பெயரில் பொலிசார் இவரை கைது செய்துள்ளனர்.
ஏவாஞ்சலிகா(Evanchalika) மருத்துவமனையில் இயக்குநரான டிசோஸா, நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்படும் ஆக்ஸிஜனை நிறுத்தியுள்ளார் என்றும் உதரவிதானத்தை வலுவிழக்கும் பவுலோன் என்ற மருந்தைக் கொடுத்துள்ளார் எனவும் இவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
ஆனால் டிசோஸா தன் மீதான குற்றசாட்டை மறுத்து வருகிறார். இது குறித்து டிசோஸா சட்டதரனி எலியாஸ் மத்தார் ஆசாத்(Eliaz mattar Azad) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது கட்சிக்காரர் மருத்துவ முறைப்படி தான் நடந்துகொண்டார் என நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்று தெரிவித்துள்ளார்
சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புலனாய்வுக் குழுவின் தலைவர் மரியோலோபாட்டோ(Mariyolopatto) கூறுகையில், இதுவரை மருத்துவமனையில் நடந்த 20 சந்தேக மரணங்கள் இந்த மருத்துவரால் தான் நடந்துள்ளது என்பது உறுதியாகி விட்டது.
இன்னும் முப்பது மரணங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இவருக்கு தற்பொழுது பிணை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
0 கருத்து:
கருத்துரையிடுக