புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Google+ சமூக வலைத்தளமானது தற்போது அதிகளவான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.


இந்நிலையில் மேலும் பயனர்களை தன்னகத்தே கவரும் விதமாகவும், தற்போதுள்ள பயனர்களுக்கான புதிய வசதியை வழங்கும் முகமாகவும் அனிமேஷன் கோப்புக்களை Profile Picture ஆக பயன்படுத்தக்கூடிய வசதியை Google+ அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வசதியானது டெக்ஸ்டாப் கணினிகள் உட்பட மொபைல் சாதனங்களிலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். எனினும் தற்போது அப்பிளின் iOS சாதனங்களில் செயற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கூகுள் எந்திரவியலாளரான Matt Steiner என்பவர் தனது Google+ பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலை படத்தில் காணலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top