புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில், திபெத் பிராந்தியத்தின் நிர்வாக நகரமான லாசாவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பகுதியில் தங்கச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சேறு
சகதியுடன், பாறைகளும், குப்பைகளும் ஒட்டுமொத்தமாக சரிந்தன. அப்போது அந்த பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த 83 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்தனர்.

இந்த தொழிலாளர்கள் அனைவரும், நாட்டின் மிகப்பெரிய தங்க உற்பத்தி நிறுவனமான நேஷனல் கோல்டு குரூப் கார்ப்பரேசனில் பணியாற்றியவர்கள் ஆவர். இவர்களில் 2 பேர் திபெத்தியர்கள் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள், படை வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 அகழ்வு எந்திரங்கள் சடலங்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top