சுவிட்சர்லாந்தில் பேத்தி என்று ஏமாற்றி நான்கு லட்சம் பறிப்பு
சுவிட்சர்லாந்தில் 70 வயதான தாத்தா பாட்டியிடம் ஒரு இளம் பெண் தன்னை அவர்களின் சொந்த பேத்தி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
அப்பெண் சில காலம் அவர்களது வீட்டில் தங்கி
அன்பாக பழகி வந்துள்ள நிலையில், ஒரு நாள் அவர்களிடம் தன் நண்பரிடம் நான்குலட்சம் ஃபிராங்குகளை கொடுத்துவிடும் படி தொலைப்பேசியில் கூறியுள்ளார்.
அவர்களும் நம்பி அந்த நண்பரிடம் நான்கு லட்சம் ஃபிராங்குகளை கொடுத்துள்ளனர். பின்னர் சில மாதங்களாக அப்பெண் அவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை.
அதனால் இத்தம்பதியினர் பேத்தியை தொலைபேசியில் அழைத்துள்ளனர். அப்பொழுது தான் அவர்களின் உண்மையான பேத்தி வந்து அவர்களைப் பார்க்கவில்லை என்றும் பணம் பெற்றுச் சென்றது வேறு யாரோ என்ற உண்மை தெரியவந்தது.
உடனே இத்தம்பதியினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பொலிசார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அண்மையில் சுவிட்சர்லாந்தில் பதிவான மோசடி வழங்குகளில் மிகப்பெரிய தொகையை ஏமாற்றிய வழக்கு இதுவாகும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் சூரிச் காவல்துறையினர் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக