இந்தியாவில் இளம்பெண்ணை கற்பழித்த பேஸ்புக் நண்பன் கைது
மகாராஷ்டிரா மாநிலம், கட்கோபர் பகுதியில் வசிக்கும் 20 வயது பெண்ணொருவரை பேஸ்புக் மூலம் நண்பராக அறிமுகமான நபர் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த சம்பமொன்று
இடம்பெற்றுள்ளது.
நலசோபராவில் வசிக்கும் அமே சக்பால் என்பவரே 'பேஸ் புக்' மூலம் அறிமுகமாகி, நாளடைவில் அறிமுகம், காதலாக உருவெடுத்துள்ளது.
தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வரும்படி காதலிக்கு அமே சக்பால் அழைப்பு விடுத்தார். அவரது பேச்சை நம்பி நலசோபராவுக்கு வந்த அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை தந்த காதலன், அவரை வீட்டுக்கு அருகே உள்ள லாட்ஜிற்கு அழைத்துச் சென்றார்.
லாட்ஜில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்தார். நிர்வாண நிலையில் தான் படுத்திருப்பதை கற்பழித்த நபர் வீடியோ எடுப்பதை பார்த்த அவர் திடுக்கிட்டார்.
தன்னை உடனடியாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். மறுத்தால், ஆபாச வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என அமே சக்பால் மிரட்டியுள்ளார்.
அவரது பிடியில் இருந்து சாதுர்யமாக பேசி தப்பிவந்த குறித்த பெண், பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனடிப்படையில், அமே சக்பால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து தந்த அவரது தாயார் அபர்ணா ஆகியோரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக