புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இத்தாலி-நவீனகால மனிதனுக்கும்,நியாண்டர்தால் எனப்படும் ஆதிகால பெண்ணுக்கும் பிறந்த குழந்தையின் சிதைந்த எலும்புக்கூடு, இத்தாலி நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு மனித இனங்களுக்கு இடையே, உடல் உறவு
இருந்ததற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது. ஐரோப்பாவின் பல பகுதிகளில், நியாண்டர்தால் என்ற மனித இனம், 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது. நவீன மனிதனான ஹோமோசேபியன் களை விட சற்று மாறுபட்ட உடலமைப்புடன் இந்த ஆதிகால மக்கள் இருந்தனர். இந்த இனத்தை சேர்ந்த ஆண், 5 அடி 5 அங்குலமும், பெண், 5 அடி 1 அங்குலமும் உயரம் கொண்டவர்கள்.

நியாண்டர்தால்கள் வசித்த பகுதிகளுக்கு வந்த நவீன மனிதர்கள், அவர்களை கொன்றொழித்ததாக, ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இத்தாலி நாட்டின், மான்டி லெசினி பகுதியில் உள்ள குகை பகுதியில், பூமிக்கு அடியில் இருந்து, 30 முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.இதுகுறித்து, மானுடவியல் ஆராய்ச்சியாளர், சில்வியோ காண்டமி கூறியதாவது:மரபணு பரிசோதனை மற்றும் முப்பரிமாண வடிவமைப்பு மூலம், இந்த எலும்புக்கூட்டை ஆராய்ந்தோம். ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளை, மனித இனத்தின் உடல்கூறுகளுடன் ஒப்பிட்டோம்.

நவீன மனிதன் மற்றும் நியாண்டர்தால் மனித இனத்தின் உடல்கூறுகள், அந்த எலும்புக்கூட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நியாண்டர்தால் மனிதனிடம் காணப்படும், மைட்டோகாண்ட்ரியா என்ற டி.என்.ஏ. இந்த எலும்புக்கூட்டில் காணப்பட்டது.பொதுவாக, இந்த டி.என்.ஏ. கருவுற்ற தாயிடம் இருந்து சிசுவின் உடலுக்கு, கடத்தப்படும். எனவே, இந்த எலும்புக்கூடு, நவீன மனித இனத்தை சேர்ந்த ஆணுக்கும், நியாண்டர்தால் இன பெண்ணுக்கும், பிறந்த கலப்பின மனிதனுடையது என்பது தெரிய வந்துள்ளது.நியாண்டர்தால் மனித இனத்தை அழித்த நவீன மனிதர்கள், அந்த இனத்தை சேர்ந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததன் மூலம், இந்த கலப்பின மனிதர்கள் உருவாகி இருக்கலாம் என, கருதப்படுகிறது. இவ்வாறு, சில்வியோ கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top