புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ராணா, விஷால் போன்ற நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வந்தவர் த்ரிஷா. இதில் ராணாவை அவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு எக்கச்சக்கமாக செய்திகள் பரவியது. ஆனால் பின்னர் அந்த செய்திகளெல்லாம் புஷ்வானமாகி
விட்டது. நாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று த்ரிஷா கூறி வந்த செய்திகள் மட்டுமே நிஜமானது. ஆனால் இப்போது த்ரிஷா இந்த ஆண்டு இறதிக்குள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறார் என்ற செய்திகள் மீண்டும் வெளியாகியிருக்கிறது. ஆனால் சினிமாக்காரர்கள் யாரும் அவரது மனதில் இல்லையாம். அவரது உறவுக்காரர் ஒருவர்தான் த்ரிஷாவை திருமணம் செய்து கொள்கிறாராம். இரண்டு குடும்பத்துக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாம்.

அதன்காரணமாக, தற்போது பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தற்போது யாராவது புதிய படங்கள் சம்பந்தமாக அவரை தொடர்பு கொண்டால், கைவசம் உள்ள படங்கள் அனைத்தும் திரைக்கு வந்தபிறகுதான் புதிய படங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்று நாசுக்காக பதில் கொடுத்து நழுவிக்கொண்டு வருகிறார். அதேசமயம், தான் திருமணம் செய்து கொள்கிற சமாச்சாரம் சம்பந்தப்பட்ட பட நிறுவனங்களுக்கு தெரிந்து விட்டதால், இந்த செய்தியை இப்போதைக்கு வெளியிட வேண்டாம். இதனால் உங்களது படங்களின் வியாபாரம்தான் பாதிக்கும் என்றும் சொல்லி அவர்களின் வாயடைத்து வைத்திருக்கிறார் த்ரிஷா

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top