புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாகிஸ்தானில் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு 2 மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் உள்ளது கிரீன் டவுண் பகுதி. இங்கு வசித்த வாலிபர் முகமது உஸ்மான்.


இந்த பகுதியில் வசித்த நஹீம் சோனு என்ற 8 வயது சிறுமி மிட்டாய் வாங்க வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றிருக்கிறாள். அப்போது நஹீம் வாயை பொத்தி ஆளில்லாத இடத்துக்கு தூக்கி சென்றிருக்கிறார் உஸ்மான்.

பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்துள்ளார். சிறுமி காணாமல் போனது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்த வழக்கு லாகூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வாசிமுர் ரகுமான் கக்வானி நேற்று தீர்ப்பளித்தார்.

கடத்தல், பலாத்காரம், கொலை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் உஸ்மானுக்கு 2 மரண தண்டனை விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்க ரூ.2.5 லட்சம் அபராதமும் விதித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top