சீனாவின் நிர்வாக நகரமான ஹாங் காங்கின் தாய் கோக் சூயி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த சாவோ விங்-கி மற்றும் அவரது மனைவி சியு யுவெட்-யீ ஆகிய இருவரையும் கடந்த சில நாட்களாக காணவில்லை.இந்நிலையில்
போலீசார் நேற்று நடத்திய சோதனையில், அந்த வயது முதிர்ந்த தம்பதியரின் தலைகள் அவர்களின் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்தது தெரியவந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட இருந்த அந்த தலைகளை பொலீஸார் கைப்பற்றினர். மேலும் அங்கு பதிவான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து நடத்திய சோதனையில், குடியிருப்பின் மற்ற பகுதிகளில் அந்த தம்பதியரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களை கொலை செய்ய பயன்படுத்திய கத்திகளும் கைப்பற்றப்பட்டன. உடலின் ஒரு சில பாகங்களைக் காணவில்லை.
நெஞ்சை பதற வைக்கும் இந்த கொடூர கொலை தொடர்பாக பொலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த தம்பதியரின் 29 வயது மகன் மற்றும், 35 வயதான மற்றொரு நபரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக