நாட்டில் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் 43 வயதான வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தின் போது காயமடைந்த அவ்வியாபாரியின் மனைவி மற்றும் மகள்மார் இருவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொட்டாவையிலிருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் பின்னதுவ பிரதேசத்தில் ஜீப் ஒன்றுடன் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த நிலையில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் மகள்மார் இருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த வியாபாரி உயிரிழந்துள்ளார். ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக