புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்தில் நேற்று வாகனத்தில் மோதுண்டு சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.


மயிலம்பாவெளி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியினுள் விளையாடிக் கொண்டிருந்த முத்துக்குமாரன் நிலக்ஸன் என்ற சிறுவன் எதிர்பாராத விதமாக வீதியை கடக்க முற்பட்டுள்ளான்.

அதேநேரம் அவ்வழியால் பயணித்த கென்டர் ரக வாகனமொன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின் சடலம் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top