ஜேர்மனியில் கூண்டர்( Günter) என்ற 75 வயது முதியவர், அண்டை வீட்டுக்காரர்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு கொடுத்து மிக கேவலமாக நடந்து கொண்டதன் அடிப்படையில் இவர் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் தற்பொழுது
விசாரணைக்கு வந்துள்ளது.
முன்னாள் சரக்குந்து ஓட்டுநரான கூண்டரை அனைவரும் பயங்கரமான கூண்டர் என்றே குறிப்பிடுகின்றனர்.
இவரது தொந்தரவுக்கள் குறித்து அயலார்கள் கூறுகையில், இவர் பூத்தொட்டிகளில் சிறுநீர் கழிப்பது, சுவர்களில் கேவலமான வாசங்களைக் கிறுக்கி வைப்பது, உடைகளைக் கழற்றிவிட்டு நடந்து செல்வது, பக்கத்துவீட்டுப் பெண்களை வேசி என்று திட்டுவது, நாள் ஒன்றுக்கு 300 முறை ஒரே ஆளுக்கு போன் செய்து தொந்தரவு கொடுப்பது, தபால் பெட்டிகளில் கெட்டுப்போன ரொட்டிகளைப் போட்டு வைப்பது போன்ற பல கேவலமான செயல்களில் ஈடுபட்டார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவரது தொந்தரவு தாங்கமால் ஒரு பெண் தன் மகனுடன் வீட்டைக் காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அண்டை வீட்டுக்காரர்கள் பொலிசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டது.
இது குறித்து அரசு சட்டதரனி டோரிஸ் மோல்லெர் ஷ்யூ(Doris Möller-Scheu) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இவர்தான் ஜேர்மனியின் மோசமான அண்டை வீட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக