மாகோ, நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த 29வயதான பெண்ணே சவுதி அரேபியாவில் இவ்வாறு துன்புறுத்தலுக்கு இலக்காகியுள்ளார்.
வீடொன்றை நிர்மாணிப்பதற்கு பணம் சம்பாதிக்கும் நோக்கில் கடந்த ஜனவரி 23ஆம் திகதி குருநாகல் நகரிலுள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் மூலம் அவர் சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்தார்.
தாம் பணியாற்றிய வீட்டிலிருந்த பெண் தம்மை கடுமையாக துன்புறுத்தி உடலுக்குள் கம்பிகளை செலுத்தியதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் பின்னர் தாம் நோய்வாய்ப்பட்டதுடன் வைத்தியரான குறித்த வீட்டின் உரிமையாளர் தன்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கம்பிகளை அகற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 13ஆம் திகதி நாடு திரும்பிய பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சவுதி அரேபியாவிலிருந்து உடலில் கம்பி ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய இலங்கைப் பணிப்பெண்ணிற்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது.
குறித்த பெண்ணை சவுதிக்கு அனுப்பிவைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக இழப்பீடு வழங்கவுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரன்தெனிய கூறினார்.
இந்த பணிப்பெண்ணின் உடலில் நான்கு கம்பித் துண்டுகள் ஏற்றப்பட்டிருந்தமை மருத்துவ பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உடலில் இருந்த கம்பிகள் அகற்றப்பட்டதன் பின்னர் பணிப்பெண் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்து:
கருத்துரையிடுக